Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

“திமுக கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று திமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை – கூட்டணி பலமாக உள்ளது” திருச்சியில் முத்தரசன் பேட்டி

காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள மகாத்மா காந்தி அஸ்தி மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்,

இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது
நாடு மிகவும் மோசமான நிலையில் போய்
கொண்டிருக்கிறது, உத்திர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை காவல்துறையினரே எரித்துள்ளனர் – பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்க்க சென்ற ராகுல் காந்தியை கீழே தள்ளி உள்ளனர்,நாடறிந்த ஒரு தலைவரை இப்படி காவல் துறையினர் தள்ளி விட்டது கண்டிக்கதக்கது. தொடர்ந்து தலித் குழந்தைகளுக்கு நாடு முழுவதுமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

கிராம சபை கூட்டத்தில் விவசாயிகளை நேரில் சந்தித்து வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்- அதற்கு பின் இரவோடு இரவாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது – இது ஜனநாயக விரோத செயல்.

70% மக்கள் விவசாயத்தை சார்ந்து உள்ளனர்,போராட்டதை கொச்சைபடுத்துகிறார் பிரதமர். 12ம் தேதி மத்திய அரசு அலுவலகங்களில் முன்பாக மாபெரும் போராட்டம் நடத்த உள்ளோம். ராகுல் காந்தி வர போகிறார் என்ற பின் உடனடியாக அங்கு ஒரு மாதம் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

திமுக கூட்டணி கட்சிகள் வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்தம் செய்வதாக தகவல் வெளியாகி வருகிறது,என்ற கேள்விக்கு? திமுக அதிகாரப்பூர்வமாக அப்படி எதையும் அறிவிக்கவில்லை – பத்திரிகைகள் தான் அப்படி கூறி வருகின்றனர்.உங்கள் சுதந்திரத்தை பயன்படுத்துகிறீர்கள்.

https://youtu.be/Jvx_Piv60ks
Advertisement

சின்னம் குறித்து திருமாவளவன் அவருடைய கட்சி குறித்து கூறியுள்ளார் இது கூட்டணிக்கு எதிரான கருத்து அல்ல – எங்கள் கூட்டணி பலமாக உள்ளது.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *