திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், இன்று (12.04.2024) காலை பொன்மலை மத்திய தொழிற்சாலையின் முகப்பில் உள்ள ஆர்மெரிகேட் அருகில், பொன்மலை பணியாளர்களிடம் துண்டறிக்கை வழங்கி தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஆதரவு திரட்டினர்.
அதனைத் தொடர்ந்து, தந்தைப் பெரியார், அண்ணல் அம்பேத்கர், அண்ணல் காந்தியார் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்துவிட்டு இன்றைய பரப்புரை பயணத்தை தொடங்கினர். திமுக திருச்சி கிழக்கு மாநகரச் செயலாளர் மண்டலத் தலைவர் மு.மதிவாணன், மதிமுக மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.கழககுமார்,
மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், மாநில தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, மாநில ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் சுமேஷ் உள்ளிட்ட திமுக, மதிமுக மற்றும் இந்தியா கூட்டணியின் தோழமை இயக்க நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments