திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி இன்று ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது…..
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நாளொன்றுக்கு ரெம்டெசிவர் 300 குப்பிகள் மட்டுமே வருகிறது. குறைவான அளவு வருவதால் அதிகப்படுத்தி தர அரசிடம் கேட்டுள்ளோம். விரைவில் ஞாயிற்றுக்கிழமை கொடுப்பது குறித்து அரசிடம் ஆலோசித்து வருகிறோம்.திருச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ,ஸ்ரீரங்கம், மணப்பாறை உள்ளிட்ட மருத்துவமனையில் சேர்த்து 600 ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதிகள் உள்ளது . பற்றாக்குறை என்பது இல்லை. தினமும் ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தியதில் 6 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கபடுகிறது.
14% பேருக்கு இதில் கோவிட் தொற்று உடையவர்களாக கண்டறிய படுகிறார்கள். இரண்டு நாட்களாக திருச்சியில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு சிலர் வேறு நோயுடன் கோவிட் தொற்று காரணமாகவும் இறந்தனர் என்றார்.
மேலும் பதிலளித்த அவர் திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் சிலையின் வலது கை மணிக்கட்டு வரை உடைக்கப்பட்ட விவகாரம் – உடைத்தது விஷமிகள் அல்ல – தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்து சிலையை திறந்த போது அதிகாரிகளின் கவன குறைவால் உடைந்தது – CCTV காட்சி ஆய்வு செய்ததில் கண்டறிந்ததாகவும், அரசு செலவில் சீரமைக்கப்படும் ஆட்சியர் தெரிவித்தார்.
திருச்சி பெட்டவாய்த்தலை அருகே தேர்தலின் போது ஒரு கோடி ரூபாய் பணம் கைப்பற்றியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஓரிருநாளில் காந்தி சந்தை மொத்த விற்பனை என்பது பொன்மலை ஜி கார்னர் க்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
Comments