தேச தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே உள்ள காதி கிராப்ட் வளாகத்தில் காந்தி திருவுருவ படத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், மேயர் அன்பழகன் ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து காதி கிராப்ட்-ல் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தனர்.
தீபாவளி சிறப்பு விற்பனையில் கதர், பாலியஸ்டர், பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம், உல்லன் ராகங்களுக்கு 20 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்குகிறது.
கடந்த ஆண்டு ரூ 2.17கோடிக்கு தீபாவளி விற்பனையானது. இந்த ஆண்டு ரூ3.78 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments