திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே ஆன்லைனில் விளையாட்டில் பணத்தை இழந்த கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் பகுதியைச் சேர்ந்த ராமாராவ் மகன் 21 வயது உடைய துன்னாமகேஷ்.இவர் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.துன்னாமகேஷ் தனது செல்போன் மூலம் ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் பல்வேறு விளையாட்டுகளை கடன் வாங்கி விளையாடியதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்ததுடன் அவ்வப்போது நண்பர்களிடம் இதுகுறித்து பேசி மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு சென்ற துன்னாமகேஷ் நடந்த சம்பவத்தை பெற்றோர்களிடம் எடுத்து கூறி கடன் பெற்ற பணத்தை திருப்பி கொடுத்துள்ளார்.

இருப்பினும் பணத்தை இழந்த வேதனையில் மன உளைச்சலில் இருந்த துன்னா மகேஷ் தனது நண்பர்கள் வாடகைக்கு தங்கி இருக்கும் விடுதியில் தங்கியிருக்கிறார்.நண்பர்கள் கல்லூரிக்கு சென்றபின்னர் தனிமையில் இருந்த அவர் அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மாலை கல்லூரி முடிந்து அறைக்கு வந்து பார்த்து நண்பர்கள் இதுகுறித்து சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
13 Jun, 2025
389
04 May, 2025







Comments