திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் வர்ஷா. கோயம்புத்தூரில் பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறைக்காக தன சொந்த ஊரான பெருவளப்பூர் கிராமத்திற்கு வந்துள்ளார். பின்னர் தனது தந்தை, தாயுடன் வயலுக்கு சென்றுள்ளார்.
அங்கே கிணற்றின் ஓரமாக சென்று கொண்டிருந்தபோது நிலைத்தடுமாறி 50 அடி ஆழ கிணற்றில் விழுந்துள்ளார். கிணற்றில் அலறல் சத்தம் கேட்ட வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த தந்தை முருகேசன் ஓடிவந்து கிணற்றில் விழுந்த தன் மகளை காப்பாற்ற முயன்றுள்ளார். முடியாத நிலையில் தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் புள்ளம்பாடி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நிலைய அலுவலர் போக்குவரத்து மகேந்திரன் சிறப்பு நிலைய அலுவலர் பாரதி, திராவிடன் மற்றும் வீரர்கள் ராபர்ட் கென்னடி, கனகராஜ், அருண்ராஜ்,
பிரகாஷ், லோகநாதன் ஆகியோர் விரைந்து சென்று கயிறு மற்றும் லைபாய் உதவியுடன் 50 அடி ஆழத்தில் தண்ணீரில் போராடி கிடந்த மாணவியை 2 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டு பெற்றோர் வசம் ஒப்படைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments