விடுமுறை நாளான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் அதிகளவு வருகை தருகின்றனர். இந்த நிலையில், திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றில், தேசிய கல்லூரியில் பயிலும் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, திருச்சி திருவெறும்பூர் வேங்கூர் கீழ முருக்கூர் மாதா கோயில் தெருவை சேர்ந்த ஜான் புஷ்பநாதன் மகன் அர்னால்டு சஞ்சய் (18) என்ற மாணவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். உடனே இதுக்குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் ஜீயபுரம் போலீசார் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments