கொரோனாவால் கல்லூரிகள் இயங்காததால் கூலித் தொழிலாளியான தனது தந்தையிடம் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருப்பதால் தனக்கு ஒரு போன் வாங்கி தரும்படி கேட்டுக்கொண்டிருந்தார். அவரது தந்தையோ தன் மகளுக்கு மாதத் தவணையில் புதிதாக ஆண்ட்ராய்ட் போன் வாங்கி கொடுத்து ஆன்லைன் வகுப்புகளில் நன்றாக படிக்க வேண்டும் என்று பாசமாக அறிவுரை வழங்கினார்.
ஆன்லைன் வகுப்புகளும் நன்றாக போய் கொண்டிருந்த வேளையில் திடீரென முசிறி கடை வீதிக்கு சிறு வேலையாக வந்த மாணவி தற்செயலாக அவரது ஆண்ட்ராய்டு போன் காணாமல் போனது. தனது செல்போன் காணாமல் போனதை அறிந்த கல்லூரி மாணவி தனது தந்தை சிரமப்பட்டு வாங்கிக்கொடுத்த செல்போனை தொலைத்துவிட்டேன் என்று கவலையில் அழுது கொண்டிருந்தார்.
தக்க சமயத்தில் ரோந்துப் பணியில் இருந்த முசிறி காவல் நிலைய காவலர் உதயகுமார் மாணவியிடம் விசாரித்து முசிறி காவல் ஆய்வாளர் கருணாகரனின் கவனத்திற்கு எடுத்துச் எடுத்துச் சென்று சைபர் கிரைம் உதவியுடன் செல்போனை கண்டுபிடித்து மாணவியிடம் ஒப்படைத்தனர். தொலைத்த சொல்போனை கண்டுபிடித்து தந்த திருச்சி மாவட்ட காவல் துறையினருக்கு கண்கலங்கி நன்றி தெரிவித்தார் மாணவி.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments