நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் புதிய ஆடைகள், பட்டாசுகள் வாங்க தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் பொது சேவைகளில் ஈடுபட்டு வரும் காவலர்கள்,
தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு தீபாவளி பண்டிகையின் போது அவர்களை உற்சாகப்படுத்தி கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியை திருச்சி விஷன் அறக்கட்டளை செய்து வருகிறது. கடந்த ஆண்டு (2023) தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டாக திருச்சி விஷன் அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுடன் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்க்கு திருச்சி விஷன் அறக்கட்டளை உடன் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலை, துண்டு, Rain Coat இனிப்புகள் கொடுத்து உதவிடும் நல் உள்ளங்களை வரவேற்கிறோம். தங்களால் முயன்ற உதவியியை செய்ய திருச்சி விஷன் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்.
திருச்சி விஷன் அறக்கட்டளையுடன் அஸ்வின் ஸ்வீட்ஸ், அனுஜ் டைல்ஸ் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கான கொண்டாட்டத்தில் இணைந்துள்ளது. இது போன்று உங்களுடைய பங்களிப்பு தூய்மை பணியாளர்களுக்கான தீபாவளி கொண்டாட்டத்தில் இணைந்து ஆதரவை தர திருச்சி விஷன் அறக்கட்டளை அன்போடு அழைக்கின்றது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments