Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மணப்பாறை சிப்காட் தொழில் பூங்காவில் மேம்பாட்டு பணிகள் தொடக்கம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தொழிற் பூங்காவில் ரூபாய் 47 கோடி செலவில் உட் கட்டமைப்பு பணிகளை தமிழகத்தின் மாநில தொழில் துறை மேம்பாட்டுக்கழகம் (சிப்காட்) தொடங்கியுள்ளது. இந்த தொழில் பூங்காவில் அமைந்துள்ள உணவு பூங்காவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள நிறுவனங்களின் அடிப்படை வசதியை பூர்த்தி செய்யும் விதமாக 5090 மீட்டர் நீளமுள்ள சாலைகள் தொழில்துறை மண்டலத்தில் அமைக்கப்படும்.

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மணப்பாறையில் இருக்கும் கண்ணுடையான்பட்டி, கே.பெரியபட்டி மற்றும் சத்திரப்பட்டி கிராமங்களில் நிலம் கையகப்படுத்திய பின்னர் 1096 ஏக்கரில் தொழில் பூங்கா நிறுவப்பட்டது. 2020 தொழில் பூங்காவில் சுமார் 127 ஏக்கரில் ஒரு மினி உணவு பூங்காவை நிறுவ ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே நேரத்தில் 93 ஏக்கர் பொது பொறியியல் தொழில்களுக்கு ஒதுக்கப்பட்டது.

உணவு பூங்காவில் உடனடியாக உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ள முதலீட்டாளர்களின் தேவையே ஆதரிப்பதற்காக அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பை பயன்படுத்தும் வகையில்  சிப்காட் சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கியுள்ளது. பிரதான சாலை 30 மீட்டர் அகலமும், நிறுவனங்களுக்கு  உட்புற சாலைகள் 25 மீட்டர் அகலமும் கொண்டு இருக்கும். தெருவிளக்குகள் 5 லட்சம் லிட்டர் மேல்நிலை நீர்த்தொட்டி, 2100 சதுர அடி நிர்வாக கட்டிடம் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் முன்னேறி வருவதாக சிப்காட் அதிகாரிகள்  தெரிவித்தன.

திருச்சி நகரத்தின் புறநகர்ப் பகுதியான பெருகமணி கிராமத்திற்கு அருகில் உள்ள ஆற்று படுகையில் இருந்து எடுக்கப்படும் காவிரி நீரை பயன்படுத்துவதன் மூலம் மூலதுறை பூங்காவிற்கு நீர் தேவையை தீர்க்கப்படும். இந்த பூங்காவிற்கு 6 எம்எல்டி தண்ணீர் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா காலகட்டத்திலும் 15% சிவில் பணிகள் ஒரு குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவு பூங்காவை பயன்படுத்துவதற்கான பால், உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் MSME-களிடமிருந்து  பெறுவது குறித்த பரிசிலனைகள் உள்ளது.

தொழில்துறை பூங்காவானது திண்டுக்கல்லில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும் கரூரில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்தில் மட்டுமே அமைந்துள்ளதால் சிப்காட் திண்டுக்கல் மற்றும் கரூர் தளமாகக் கொண்ட தொழில் பூங்காவை அருகில் இருக்கும் போது மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிப்காட் முக்கிய முதலீட்டாளர்கள் யூனியன் மற்றும் மாநில அரசாங்கங்கள் உடன் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் நிதி ஆதரவை குறித்த விவாதங்களை நடத்தியுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *