திருச்சி மாநகர காவல்துறையில் அரியமங்கலம் காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ ஆக பணியாற்றி வந்தவர் சன்னாசி (58). இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை கொரோனோ பரிசோதனைகள் செய்து நெகட்டீவ் வந்து சுவாச கோளாற்றிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
தற்போது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று (28/07/2020) காலை உயிரிழந்த எஸ்எஸ்ஐ சன்னாசியின் உடலுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
Comments