திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் பணிபுரியும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவலர்களுக்கு கோடை கால வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்கும் பொருட்டு அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் தினமும் காலை 11.00 மணி மற்றும் மதியம் 16.00 மணிக்கு கோடை காலம் முழுவதும் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் மோர் மற்றும் குளிர்பானம் வழங்கப்படும்.
இந்நிகழ்வை துவக்கி வைத்து நடைமுறைக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன், திருச்சி மாநகர காவல் ஆளிநர்களுக்கு பயனளிக்கும் விதமாக அவரே வழங்கினார். இந்நிகழ்வின் போது
குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் வேதரத்தினம் மற்றும் காவல் அதிகாரிகள் ஆளுநர்கள் உடன் கலந்து கொண்டார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
Comments