திருச்சி மாநகராட்சியில் இன்று மக்கள் குரூப்பில் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குப் பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி மனு அளித்தார். அம்மனுவில்..
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் போக்குவரத்து சாலை வார்டுகளின் தெருக்களில் மாதக்கணக்கில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுதடைந்து நிறுத்தப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக் பழைய உதிரி பாகங்கள் தெருவோரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக கிடப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாவதோடு மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி டெங்கு பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதற்கும் வழிவகுக்கும்.
ஆகவே திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம் சென்னை மாநகராட்சி போல அப்புறப்படுத்திட நடவடிக்கை எடுப்பதோடு இதுபோன்ற செயல்களை செய்பவர்கள் மீது அபராத கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையினையும் அமுல்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments