பாஜக அரசை அகற்றுவோம் நாட்டை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் நாடு தழுவிய நடை பயணத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மேற்கு பகுதி குழுவின் சார்பில் இரண்டாவது நாள் நடைபயணம் இந்தியக் கம்யூன்ஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் க.இப்ராகிம் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 8வது வார்டு பாண்டமங்கலத்தில் துவங்கி நடைபெற்றது நடைபெற்றது.

இதை ஏ.ஐ.டி.யூ.சி மாநில பொது செயலாளர் இராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மேலும் நடைபயண இயக்கத்தில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் பாஸ்கர்,சங்கையா கட்சியின்பகுதிச் செயலாளர் இரா.சுரேஷ் முத்துசாமி, துணைச் செயலாளர்க.முருகன், சந்திரபிரகாஷ், சரண் சிங், ஆனந்தன், காஜா, தர்மா, ஜெய்லானி, நாகராஜன், பார்வதி உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர். 8வது வார்டு மற்றும் 24 வது வார்டு தெருக்களின் வழியாக நடை பயணமாக மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்து புத்தூர் அக்ரஹார பேருந்து நிறுத்தத்தில் நிறைவடைந்தது. 24 ஆவது வார்டு செயலாளர் ப. துரைராஜ் நன்றி கூறுனார்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

13 Jun, 2025
388
07 May, 2023










Comments