கடந்த மூன்று நாட்களாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காவேரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவருடைய ரத்த மாதிரிகளை எடுத்து சென்னைக்கு அனுப்பியதில் ஆய்வு கூடத்தில் இருந்து இன்று பரிசோதனை முடிவுகள் வந்தது.
இதையடுத்து அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது. 48 மணி நேரத்திற்கு யாரும் அவரை சந்திக்கக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் தீவிர சிகிச்சை பிரிவில் தனி அறையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சுத் திணறலும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Comments