திருச்சி மிளகு பாறை பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
Advertisement
அவர் பேசுகையில்… “பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக மத்திய அரசு துரோகம் விளைவித்து வருகிறது. பிற்படுத்த மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத இது மிகவும் கண்டிக்கத்தக்கது. வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தினோம்.
இந்தியளவில் 300 இடங்களில் 3000 மேற்பட்ட வருகின்ற அக்டோபர் மாதம் 28 முதல் நவம்பர் 4 தேதி வரை விவசாயிகள், தொழிலாளர்களுக்கு மாபெரும் மாநாட்டை தஞ்சை, மதுரை, சேலம் மற்றும் திருச்சியில் நடத்த உள்ளோம்.
வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்து வருகின்றனர். அன்றைய தினம் தமிழகம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடைபெறும்” என்றார்
மேலும் அவர்… பொன்மலை ரயில்வே பணிமனையில் வடமாநிலத்தவர்கள் அதிகமான நியமிக்கப்படுகின்றனர் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இதற்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம். முதலமைச்சர் தாயார் இழப்பிற்கு அமித்ஷா இரங்கல் தெரிவித்து இருப்பது அவருடைய மொழி வெறியினை வெளிப்படுத்தியுள்ளது.
எங்களுடைய கூட்டணி மிகவும் பலம் பொருந்திய சக்தி வாய்ந்த கூட்டணியாக இருக்கிறது, 234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். என்றார்
Comments