திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில்,

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (24.05.2023) கலந்து கொண்டு, கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, பழம் மற்றும் பொன்னான ஆயிரம் நாட்கள் குறித்த மடிப்பேடு அடங்கியப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
முன்னதாக, வளைகாப்பு நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் உடல் எடை மற்றும் இரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு 5 வகையான கலவை உணவு வழங்கப்பட்டது.
இச்சமுதாய வளைகாப்பு நிகழ்வில் தாய்சேய் நலனை மேம்படுத்துவதற்காக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் 100 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, பழம் மற்றும் பொன்னான ஆயிரம் நாட்கள் குறித்த மடிப்பேடு அடங்கிய சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்) பொ.ரேணுகா,
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (உறையூர்) ம.காஞ்சனா, மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

13 Jun, 2025
389
24 May, 2023










Comments