ஏப்ரல் 2023 வரை நடைபெறவுள்ள பல்வேறு போட்டிகளில் தமிழ்நாடு அணிக்கான வீரர் மற்றும் வீராங்கனைகளை பின்வரும் விளையாட்டுகளுக்கு போட்டிகள் நடைபெறவுள்ளது.
இத்தேர்வுப் போட்டிளில் கலந்து கொள்வதற்கான தகுதிகள் (01.01.2004) அன்றோ அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். தகுதியான ஆவணங்கள் ஏதேனும் இரண்டு : ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட், 10-ம் வகுப்புச் மதிப்பெண் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 2012ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அல்லது அதற்கு முன் மாநகராட்சி / கிராம பஞ்சாயத்தால் வழங்கப்பட்டது).
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் மேற்காணும் தேர்வு போட்டிகள் நடைபெறும் இடங்களில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் பங்குபெறும் விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு தினப்படி மற்றும் பயணப்படி வழங்கப்படமாட்டாது.
மேலும், முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இனைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியிலும், தொலைபேசி எண் 0431-2420685 / 7401703494 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments