தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக வலைதளத்தில் ஆடியோ பதிவு வெளியிட்ட ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கிளியனூர் ஒழிந்தியாப்பட்டு கிராம ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல். திமுகவை சேர்ந்த இவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து ஆடியோவில் பேசி சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இதில் ஆத்திரமடைந்த பாஜகவினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இந்நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் முத்து மாணிக்கவேல் திருச்சி கன்டோன்மென்ட் அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சக்திவேல் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments