Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கலைஞர் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

தமிழக முன்னால் முதல்வர் கலைஞர் பற்றி அவதூறு பரப்பிய அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Advertisement

திருச்சி மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக கொடுக்கப்பட்ட இந்த புகாரில்… “திமுக கழகத்தின் முன்னாள் தலைவர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு அந்தந்த பகுதியில் உள்ள பிரமுகர்கள் சமூக வலைத்தளங்களில் சிறப்பித்ததாகவும், கலைஞரின் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்துள்ளனர். அப்போது சமூக வலைதளம் ஒன்றில் கலைஞர் பற்றி அவதூறாகவும், தரக்குறைவாகவும், கலைஞரின் புகைப்படத்தை பல கோணங்களில் சித்தரித்து வெளியிட்ட அதிமுக பிரமுகர் kuthur kts muthukumar மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.அருண், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் B.R. சூர்யா, திருவரங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் திருச்சி லெட்சுமணன் தலைமையில் திலீபன், தபு, ஜெயசீலின், பாலா, லால்குடி சத்தியா திருச்சி மேற்கு கோவிந்த சாமி, ஆசிக், வழக்கறிஞர் கவியரசன் ஆகியோர் புகார் அளித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *