தேர்தல் நடைமுறையின்போது ஒருவரது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த தூண்டும் எண்ணத்தில் ரொக்கமாக அல்லது பொருளாக யாதொரு கையூட்டு அளிக்கின்ற அல்லது பெறுகின்ற யாதொரு நபருக்கு இந்திய தண்டனை சட்டம் 171 B ஆம் பிரிவின்படி, ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும் விதிக்கத்தக்கதாகும்.
மேலும், இந்திய தண்டனை சட்டம் 171 C ஆம் பிரிவின்படி, வேட்பாளர், வாக்காளர் அல்லது ஏனைய யாதொரு நபரை ஏதேனும் வகையில் காயப்படுத்தி அச்சுறுத்தும் யாதொரு நபருக்கு ஓராண்டு வரையிலான சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும் விதிக்கத்தக்கதாகும். கையூட்டு அளிப்பவர் மீதும் பெறுபவர் மீதும் வழக்குகளைப் பதிவு செய்வதற்கும், வாக்காளர்களை மிரட்டி அச்சுறுத்துகின்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து குடிமக்களும் கையூட்டு பெறுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். யாரேனும் கையூட்டு அளிக்கின்ற நேர்வில் அல்லது வாக்காளர்களுக்கு கையூட்டு வழங்கப்படுவது அல்லது வாக்காளர் அச்சுறுத்தப்படுவது / மிரட்டப்படுவது பற்றி அறிந்திருப்பின், அது குறித்து புகார்களை பெறுவதற்கென ஏற்படுத்தப்பட்ட மாவட்டத்தின் 24 மணிநேர புகார் கண்காணிப்புக் குழுவின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 1800 599 5669 தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் குடிமக்கள் தங்கள் புகார்களைத் தெரிவித்திட cVigil Citizen appஎன்ற மொபைல் செயலியையும் பயன்படுத்தலாம். குடிமக்கள் இந்த மொபைல் செயலியை https://play.google.com/store/apps/details?id=in.nic.eci.cvigil இணையதள இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் .
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments