திருச்சி மாவட்டம் கண்ணனூர் அருகே அனுமதியின்றி டாஸ்மாக் மதுபானம் விற்கப்படுவதாக திருச்சி போலீஸ் எஸ்.பி. சுஜித் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கண்ணனூர் சென்ற தனிப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கண்ணனூர் டாஸ்மார்க் கடை அருகே குடோன் ஒன்றில் 600 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து குடோனிலுள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அனுமதியின்றி மது விற்பனை செய்த குற்றத்திற்காக துறையூர் மணிமாறன், திருத்தலையூர் வேலுச்சாமி, சௌந்தரராஜன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். சம்பவம் குறித்து முசிரி மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் .
இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments