திருச்சி மாவட்ட கையுந்துப்பந்து கழகத்தின் சார்பாக திருச்சி மாவட்ட கையுந்துப்பந்து கழகத்தின் தலைமை புரவலரும், தமிழ்நாடு மாநில கையுந்துப்பந்து கழகத்தின் புரவலரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திருச்சி மாவட்ட கையுந்துப்பந்து கழகத்தினர் பாராட்டு விழா நடத்தியுள்ளனர்.
இவ்விழாவில் திருச்சி மாவட்ட கையுந்துப்பந்து கழகத்தின் தலைவர் முனைவர். தங்க பிச்சையப்பா தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட கையுந்துப்பந்து கழகத்தின் செயலாளர் S.கோவிந்தராஜன் விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.
செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்ற இவ்விழாவில் திருச்சி மாவட்ட கையுந்துப்பந்து கழக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், உடற் கல்வி இயக்குநர்கள், உடற் கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
பாராட்டுகளை ஏற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.. திருச்சி மாவட்டத்தில் கையுந்துப்பந்து விளையாட்டு மட்டும் அல்லாமல் அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அதன் வளர்ச்சிக்காக விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து அதற்கான முயற்சிகள் செய்யப்படும் என்றும், மேலும் திருச்சி மாவட்டத்தில் மிக விரைவில் தேசிய அளவிலான கையுந்துப்பந்து போட்டிகள் நடத்தப்படும் என்று கூறினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
Comments