திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்பாக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கிறிஸ்டோபர் திலக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுசெயலாளர் பெனட் அந்தோணிராஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்பான ஆலோசனைகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் பொருளாளர் முரளி, தெற்கு மாவட்ட துணைதலைவர் எழிலரசன், காட்டூர் கோட்ட தலைவர் ராஜா டேனியல், அரியமங்கலம் கோட்ட தலைவர் அழகர், ஊடகபிரிவு மாவட்ட தலைவர் செந்தில், ஐடி பிரிவு மாவட்ட தலைவர் லோகேஸ்வரன், ஐடி பிரிவு கிழக்கு தொகுதி தலைவர் அரிசிக்கடை டேவிட், வளன்ரோஸ், கார்த்திகேயன், கிளமெண்ட், வீரமணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1. நமது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களின் சாதனைகளையும், நமது மிதவாத கொள்கை ரீதியான சித்தாந்தங்களை எளிதாக காணொளி மூலமாக மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
2. புதிய நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை நடத்த வேண்டும்.
3. வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிபட வழங்கவேண்டும்.
4. குடுப்ப பெண்களுக்கு அரசு உதவி தொகை பெற்று தரவேண்டும்.
5. பூத் கமிட்டி விரிவாக்கம் செய்யவேண்டும்
6. நிர்வாகிகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கவேண்டும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments