திருச்சியிலுள்ள வாகனங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் காலை முதல் இரவு முழுவதும் தொடர்ந்து காவல்துறையினருடன் துணை ராணுவத்தினரும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பொதுத்தேர்தல் 2021 திருச்சிராப்பள்ளி மாநகரில் சட்டவிரோதமான மற்றும் ஆவணங்களற்ற பணப் பரிவர்த்தனைகளை தடுக்கும் பொருட்டும், தேர்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் அதிரடியாக பலவிதமான வாகனங்கள் விடுதிகள் என ஒரே நேரத்தில் காவல் துறையினர் துணை ராணுவம் உள்ளிட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் விடுதிகளில் தங்கி உள்ளார்களா என்ற சோதனையும் நேரடியாக தனியார் விடுதிகளின் அறைகளில் காவல்துறை நேரடியாக சோதனை செய்தனர். அவர்களின் உடைமைகளும் சோதனை செய்யபட்டது.
நேற்று காலை முதல் இரவு முழுவதும் திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மையங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் திருச்சி மாநகர காவலர்கள் மற்றும் மத்திய காவல் படையினர் சேர்ந்து சோதனை நடத்தினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments