Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

அரசு அதிகாரிகளின் கையெழுத்திட்டு போலி சான்றிதழ்கள் தயாரித்து கொடுத்த ஒப்பந்த பணியாளர் கைது

அரசு முத்திரைகள் ஆவணங்கள் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் முத்திரைகள் கையெழுத்துக்களை போலியாக தயாரித்து முறைகேடாக பயன்படுத்தியதாக வழக்கு

திருச்சி மாவட்டம் லாலகுடி அருகே திருமண மேடு ஊராட்சியில் உள்ள ராஜகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி மகன் குமாரவேல் வயது 46. இவர் லால்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ரெக்கார்டு பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.இவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு நிலத்தின் வரைபடம் அடங்கல் உள்ளிட்ட சான்றிதழ்களை ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்களுக்கு தன்னிச்சையாக கொடுத்த வருவதாக புகாரின் பேரில் அலுவலகத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படும் வாரிசு சான்றிதழ் ,இறப்பு சான்றிதழ், பட்டா போன்றவற்றை லால்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த குமரவேல் என்பவர் அரசு முத்திரைகளையும்,தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளின் கையெழுத்துகளைபோலியாக தயாரித்து வாரிசு சான்றிதழ் பிறப்பு இறப்பு சான்றிதழ் போன்றவைகளை முறைகேடாக தயாரித்து விநியோகம் செய்து வந்துள்ளார்.

 இப்போது லால்குடி அருகே மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வாரிசு சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளார் அந்த வாரிசு சான்றிதழ் போலியானது என தெரிய வந்தது அடிப்படையில் மேட்டுப்பட்டி விஏஓ அம்புரோஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் லால்குடி போலீசார் குமரவேல் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

குமரவேலிடமிருந்து லால்குடி தாசில்தார் கோபுர முத்திரை, லால்குடி தாசில்தார் , விஏஓக்கள்,ஆர் ஐ , துணை வட்டாட்சியர் ஆகியோரின் முத்திரைகள், சீல்களையும் வாரிசு, இறப்பு போன்ற போலியான சான்றிதழ்களையும் கைப்பற்றினார் மேலும் குமரவேலிடம் விசாரணை செய்தபோது இந்த போலியான அரசு முத்திரைகளை தயாரித்து தாசில்தார் வி ஏ ஓ ஆர் ஐ உள்ளிட்ட அதிகாரிகளின் கையெழுத்தை சமயபுரம் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஜான்சன் இளையராஜா ஆகியோருக்கு அதிக அளவில் கொடுத்து வந்ததாக கூறிய கூறியதன் அடிப்படையில் இந்த போலியான ஆவனங்கள் தயாரிப்பதில் தொடர்புடைய சமயபுரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் ஜான்சன் , இளையராஜா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய

  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

 

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *