திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமதி, புத்தாநத்தம் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன், ஜான் வில்லியம், மணப்பாறை தலைமை காவலர்கள் மைதிலி, சுஜாதா, அமுதவள்ளி, உமாராணி, அந்தோணியம்மாள், முதல் நிலை காவலர் ஆஷியா உள்பட 9 பேரை இடமாற்றம் செய்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவு.
கொடுத்த பணி செய்யயாமல் தாமதம், அலட்சியம்,வீண் விவாதங்கள், மோசமான செயல்திறன் உள்ளிட்ட காரணங்களால் இவர்கள் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்.பி ஆணையிட்டுள்ளார். திருச்சி மாவட்ட எஸ்பியாக வருண்குமார் பொறுப்பேற்றுதில் இருந்து பொதுமக்கள், காவலர்களின் குறைகளை தீர்ப்பதிலும் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.
அதேபோல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் உள்ளிட்டவருக்கு கொடுக்கும் பணிகளை செய்யாமல் அலட்சியமாக இருப்பது குற்ற நடவடிக்கைகள் குறித்து தெரிந்தும் தடுக்காமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களை கண்டறிந்தால் உடனடியாக வேறு காவல் நிலையங்களுக்கு கூண்டோடு பணியிட மாற்றம் செய்யும் அதிரடிகளும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் நவல்பட்டு, திருவரம்பூர், முசிறி, புலிவலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரிபவர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments