பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு, கொரோனா நோய்தொற்று காலத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பு மற்றும் அறிவிக்கப்படாத மின் தடை, கட்டுமான பொருட்கள் விலை ஏற்றம் செய்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து திருச்சி மாவட்ட தேமுதிக சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விஜயகாந்த் இளைய மகன் விஜய பிரபாகரன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயபிரபாகரன்… பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெருமளவு சிரமப்படுகின்றனர் இதேபோல் கேஸ் விலை உயர்வால் குடும்பத் தலைவிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் பொறுப்பேறுள்ள புதிய அரசு, ஒரளவு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதை பாராட்டுகிறோம்.
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது போல பெட்ரோல், டீசல், கட்டுமான பொருட்களின் விலை உயர்வையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். தே.மு.தி.கவை பழைய நிலைக்கு கொண்டு வர என் உயிரையும் கொடுப்பேன் என பேசினார்.
இதனையெடுத்து விஜயபிரபாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்… எல்லாவற்றையும் விமர்சனம் செய்வது அரசியல் அல்ல. மக்களின் பிரச்சினைகளை எடுத்து சொல்வது தான் அரசியல். மத்திய, மாநில அரசுகள் நல்லது செய்தால் பாராட்டுவோம். தப்பு செய்தால் தட்டிக் கேட்போம்.
இதுதான் கேப்டன் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது. இதுபோல தான் தேமுதிகவும் இருக்கும். நடந்து முடிந்த தேர்தலால் கொரோனா தொற்று அதிகமானது. அதனால் உள்ளாட்சித் தேர்தல் குறித்து தற்போது பேச வேண்டாம் என தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
Comments