திருச்சி மணப்பாறை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் துணை ஆட்சியருமான வைத்தியநாதன் வயது( 58) இவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குகளை வீடு தேடி கொடுக்கும் பணிக்கான தேர்தல் அலுவலர்களுடன் பயிற்சி கூட்டம் நடைபெற்றது.அதில் பங்கேற்று விட்டு தான் இவர் சென்றுள்ளார் .அதன் பிறகு இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் இவருடன் தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
மேலும் நாளை 12-ம்தேதி முதல் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை இவரிடம் தாக்கல் செய்ய வேண்டும். மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இவரை நேரில் சந்தித்து வேட்புமனுத்தாக்கல் வேண்டும்.
இந்நிலையில் இவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .தேர்தல் அதிகாரிகள் மத்தியிலும் பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
Comments