திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் மாநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இம்முகாமில் அரசு மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர் குழுவினர் 60க்கும் மேற்பட்ட காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா இரண்டாம் கட்ட அலை காரணமாக பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், பாதுக்காப்பு பணியில் ஈடுப்படும் அனைவருக்கும் கொரோனா நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வானது வழங்கப்பட்டது.
மேலும் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள அறிவுரை கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments