தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டு மூன்று என அலைகளாக வந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டது. தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 76 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று ஒரேநாளில் மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4 பேர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி மாவட்டத்தில் 89 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

13 Jun, 2025
388
14 April, 2023










Comments