திருச்சி மாநகராட்சி பகுதிகளில் ஒரே நாளில் ரூ2.35 கோடி வாடகை மற்றும் குத்தகை பாக்கி தொகையை வசூலித்து திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சாதனை படைத்துள்ளது. திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான 2471 கடைகள்,வணிக வளாகங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் அரசுத்துறை, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனி நபர்களுக்கு வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை இடையேயான ஒரு மாத காலத்தை பயன்படுத்தி திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் வாடகை,குத்தகை நிலுவை தொகையை வசூல் செய்வதற்கான முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.
இதனால் அதிர்ந்து போன வாடகை மற்றும் குத்தகைதாரர்கள் உடனடியாகரூ.2.35 கோடி நிலுவைத் தொகையை செலுத்தினர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்… மீதமுள்ள 37 கோடி ரூபாயை ஒரு மாத காலத்திற்குள்ளாக வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை பகுதியில் உள்ள 44 கடைகளில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி சுமார் 4 கோடி ரூபாய் உள்ளதால் இன்று மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள 44 கடைகளுக்கும் சீல் வைத்தனர் .
இதனால் அப்பகுதியில் வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரி தரப்பில் வரி பாக்கி செலுத்திவிட்டு
தாங்கள் வழக்கம்போல் வியாபாரம் செய்து கொள்ளலாம் இது அரசு உத்தரவு விதியை மீறினால் தங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தியதால் வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
பின்னர் கடைகளுக்கு மாநகரராட்சி அதிகாரிகள் அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் கமலக்கண்ணன் உதவி வருவாய் ஆணையர் பிரபாகர் வருவாய் அலுவலர் கணேஷ் உள்ளிட்டோரர் காவல்துறையினருடன் சீல் வைக்கும் பணி தொடர்ந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments