Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி நகரில் அடர்காடுகளை உருவாக்கும் மாநகராட்சி:

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் அரங்கநாதஸ்வாமி திருக்கோவில் இணைந்து மியாவாகி முறையில் அடர்காடு உருவாக்கும் விழா இன்று நடைபெற்றது.

மியாவாகி என்ற ஜப்பான் தாவரவியலாளர் அவர்களால் உருவாக்கப்பட்டு 4 கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டு உள்ளார். இது பத்து மடங்கு வேகமாகவும் 30 மடங்கும் அடர்த்தியாகவும் வளரும். இம்முறையே நமது திருச்சியில் முதல்முறையாக கையாளப்படுகிறது.

இந்த அடர் காடுகள் உருவாக்கப்பட்டு மக்கள் இக்காடுகளில் நடக்கும் வாய்ப்பினை மாநகராட்சி அளிக்கிறது‌. இதற்காக 8 அடி பாதைகள் இடையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவற்றின் மூலம் குறைவான இடத்தில் அதிக மரங்கள் இருப்பதால் பூமியின் வெப்பநிலை குறையும், காற்று மாசுபாடு கட்டுப்படும் பறவைகள், புழு, பூச்சிகள் என அனைத்தும் வாழும். மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் இது போல் அடர் காடுகளை உருவாக்க மாநகராட்சி சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இங்கு புங்கமரம், பாதாம், வேங்கை, வாகை, ஈட்டி, மலைவேம்பு, வேப்பமரம், மருதாணி, கொய்யா, இட்லி பூ என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரவகைகளும், 53 வகை நாட்டு மரங்களும் நடப்பட்டுள்ளன.5027 சதுர மீட்டரில் அரங்கநாதஸ்வாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இந்த அடர் காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.இவ்விழாவில் திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் ஸ்ரீரங்கம் துணை ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்திலேயே முதல்முறையாக முன்னெடுத்து வைக்கும் திருச்சி மாநகராட்சியில் மாற்றங்களை நிகழ்த்த, பசுமையை காக்க,எழுத்துக்களை செயலாக்க, இனிவரும் காலங்களில் கரம் கோர்த்து செயல்படுவோம்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *