திருச்சி மாநகராட்சி 57 வது வார்டில் எடமலைப்பட்டிபுதூர் கங்கை நகர் பகுதியில் குப்பைகள் அதிகமாக இருப்பதாக அப்பகுதியின் மாமன்ற உறுப்பினர் முத்து செல்வத்திற்கு பொதுமக்கள் புகார் கைப்பேசி எண்ணில் தெரிவித்தனர். உடனடியாக வார்டு கவுன்சிலர் முத்துச்செல்வம் மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் கொடுத்து அந்த மரக் கழிவுகளை அகற்றி அப்பகுதியை சுத்தம் செய்தார்.
இது போன்ற குப்பைகளை அகற்றுவது அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்கவில்லை என்றால் உடனே தனக்கு புகார் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கடந்த 2ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். நேற்று 4ஆம் தேதி மேயர், துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேயர் அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய போது குப்பை இல்லாத மாநகராட்சியாக திருச்சியை உருவாக்குவேன் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் திருச்சி மாநகராட்சியின் 57வது வார்டு கவுன்சிலராக மக்களின் குறைகளை அரைமணிநேரத்தில் தீர்த்து வைத்த பெருமை முத்து செல்வத்திற்கு முதலாக சேர்ந்துள்ளது. பொதுமக்களும் அவரை பாராட்டி உள்ளனர். இது போன்று அனைத்து கவுன்சிலர்களும் செயல்பட வேண்டும் என மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO
Comments