திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள வி.துறையூர் பகுதியில் சமயபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வி.துறையூரில் உள்ள பங்குனி ஆற்று பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிக்கொண்டிருந்த இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் சமயபுரம் கடைவீதி பகுதியை சேர்ந்த கண்ணன், வி.துறையூர் பகுதியை சேர்ந்த ராகுல் என்பதும், இருவரும் சேர்ந்து நம்பர் ஒன் டோல்கேட் நரிக்குறவர் தோப்பை சேர்ந்த ராஜா என்பவரிடம் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வாங்கி வைத்திருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் நாட்டுத் துப்பாக்கி விற்பனை செய்த ராஜா, கண்ணன் மற்றும் ராகுல் மூவர் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments