திருச்சி விமான நிலையத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் இதுவரை 1736 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான மருந்துகள் 45 ஆயிரம் மத்திய அரசிடம் கேட்டிருந்தோம்.11796 மருந்துகள் வந்துள்ளன. கைவசம் 4366 மருந்துகள் உள்ளது. இதுவரை தமிழகத்தில் 77 பேர் கருப்பு பூஞ்சை பாதிப்பால். இறந்துள்ளனர்.
தடுப்பூசிகள் இதுவரை ஒரு கோடியே 5 லட்சத்து 10 ஆயிரம் மத்திய அரசிடமிருந்து வந்துள்ளது. ஒரு கோடியே 5 லட்சம் தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ளது. தற்போது 6 லட்சத்து 16 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளது. இந்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் இந்த தடுப்பூசிகள் போட முடியும். கோவிட் இறப்பு விகிதத்தை மறைக்க கூடாது என அதிகாரிகளுக்கு தமிழக சுகாரத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது என்றார். ஆயுர்வேதிக், சித்தா, யுனானி முறையில் சிகிச்சை 69 இடங்கள் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 22,000 பேர் இதில் பயனடைந்துள்ளனர்.
அவர்களுக்கு சிகிச்சை முடிந்து செல்லும் போதும் பாதுகாப்பு பெட்டகம் கொடுத்த அனுப்பப்படுகிறது. இன்று தஞ்சையில் நடைபெறும் ஆய்வில் செவிலியர் ஒருவரால் பிறந்த குழந்தை விரல் துண்டானது குறித்தும் விசாரிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
Comments