தமிழகத்தில் சமூக வலைதளங்களை சமீபகாலமாக சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக தமிழக முதல்வர் மற்றும் தமிழ்நாடு அரசை விமர்சனம் செய்பவர்கள் மீதும், போதை கலாச்சாரம் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான பழக்க வழக்கங்களை சமூக வலைதளத்தில் ஊக்கப்படுத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தான் திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் சமூக வலைதளத்தை கண்காணித்த போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த, பிரபல யூட்யூபர் சாட்டை துரைமுருகன், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதி மற்றும் தமிழக அரசை தரக்குறைவாக விமர்சித்ததாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில் திருநெல்வேலி வீராணம் பகுதியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை துறைமுருகனை திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments