திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றுக்குள் கட்டப்பட்டிருந்த தடுப்பணை உடைந்து விட்டது.
மேலும் ஆற்றுக்குள் இருந்த இரண்டு உயர் அழுத்த மின் கோபுரம் சாய்ந்து விழுந்தது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து குறைந்து விட்டது. இந்நிலையில் நேற்று காலை கொள்ளிடம் புதிய பாலத்தில் நடைபயிற்சி சென்றவர்கள் ஆற்றுக்குள் தடுப்பணை உடைந்திருந்த இடத்தில் பெரிய உருவம் ஒன்று நீந்தி செல்வதை பார்த்தனர். பின்னர் சற்று உற்றுநோக்கி பார்த்தபோது அதுபெரிய முதலை என்று தெரியவந்தது.
உடனே ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறைக்கு தகவல்தெரிவித்தனர். கொள்ளிடம் ஆற்றுக்குள் முதலை இருந்த தகவலறிந்ததும் ஏராளமானோர் வந்து வேடிக்கை பார்த்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வந்து பார்த்தபோது முதலை 40 அடி ஆழ தண்ணீருக்குள் சென்று விட்டது. இதனால் ஆற்றுக்குள் யாரும் இறங்கி குளிக்க வேண்டாமென்று பொது மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments