Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பயிர்க்கடன் தள்ளுபடியால் அதிமுகவினருக்குத் தான் பயன் திருச்சியில் கே.என். நேரு பேட்டி

திருச்சியில் திமுக மாநாடு நடத்துவது பற்றி நாளை மறுநாள் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஆவதற்கான முன்னோட்டமாகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. 

ஐபேக் டீமுக்கும், எங்களுக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. இதனால், திருச்சி மாநாடு தள்ளிப் போகிறது என்ற குற்றச்சாட்டு தவறானது. எங்களை (திமுக) வெற்றிப் பெற வைக்கவே ஐபேக் டீம் பாடுபடுகின்றனர்.

                        Advertisement
தமிழக முதல்வர் அறிவித்து உள்ள விவசாய கடன் தள்ளுபடியில் 90% அதிமுகவினர் தான் பயனடைந்துள்ளனர். விவசாயிகள் யாரும் பயன் அடைய வில்லை 
அதனால் திமுகவுக்கான ஓட்டு எந்த விதத்திலும் பாதிக்காது. தமிழக முதல்வர் திமுக தலைவரை அதிகாரம் செய்ய முடியாது. முதல்வர் பழனிச்சாமி எப்படி கூட்டம் சேர்க்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

மக்களோடு மக்களாக இருந்து பிரச்னைகளை கேட்டு வருவதால்
வரும் தேர்தல் முடிவுக்கு பின், மக்களிடம் புகார் மனுவாங்கும் ஸ்டாலின் தான் பெட்டியை திறப்பார்.
அதிமுக – அ ம முக சேர்த்தாலும் பிரச்னை இல்லை, பிரிந்தாலும் பிரச்னை இல்லை. தேர்தலில் வெற்றி திமுக வுக்குத்தான் என்பது உறுதி
என்று நேரு தெரிவித்தார்.

                           Advertisement

முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 1.5 லட்சம் மதிப்பில் என்ற 2 நபருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், மூன்று சக்கர சைக்கிள்கள், மடக்கு சக்கர நாற்காலிகள், முடநீக்கியல் சாதனம் போன்றவற்றை மாற்றுத் திறனாளிகளுக்கு  வழங்கினார்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *