திருச்சி நீதிமன்ற வளாகத்தினுள் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. காலியிடங்களில் தேங்கிய மழை நீரால் சுகாதாரக்கேடு ஏற்படுகின்றது. இதனால் வழக்குரைஞர்கள், வழக்காடிகள் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கின்றனர்.
எனவே பொதுப்பணித்துறை உடனே சாலைகள் மற்றும் மழைநீர் தேங்காாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீதிமன்ற வளாகத்தில் சுற்றித் திரியும் நாய், மாடுகள், குதிரைகள் ஆகியவற்றினால் நீதிமன்றத்துக்கு வருபவர்களுக்கு மிகுந்த இடையூறாக உள்ளது.
உடனடியாக பொதுப்பணித்துறை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவு சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம்.சரவணன் தலைமையில் பார் கவுன்சில் உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவு மாநில பொதுச் செயலாளருமான வழக்குரைஞர் எம் ராஜேந்திரகுமார் முன்னிலையில் மனு கொடுக்கப்பட்டது.
இம்மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்நிகழ்வில் காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவு நிர்வாகிகள் வழக்கறிஞர் அல்லூர் பிரபு, கிருபாகரன் சிவகாமி, ஜீயபுரம் சுப்பிரமணி, கோகுல், மேத்யூ, முருகையன் மற்றும் பல வழக்கறிஞர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanOll
Comments