Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

உயிருக்கு ஆபத்து – ஸ்ரீரங்கம் பலஹாரி மடம் ஜீயரின் வாக்குமூலம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் அம்மா மண்டபம் ரோட்டில் அமைந்துள்ள பல கோடி அசையா சொத்துள்ள ஸ்ரீ பலகாரி புருஷோத்தம ஜீயர் மடத்தின் ஆறாவது பட்ட ஜீயராக தற்போது அங்கு HR – CE யினால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீ பலஹாரி புருஷோத்த ராமானுஜர் ஜீயர் அவர்கள் உள்ளார். அவர் தன்னை கொலை செய்வதற்காகவும்,

இந்த மடத்தின் சொத்துக்களை அபகரிப்பதற்காகவும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பல லாட்ஜ்களை நடத்தி வரும் தொழிலதிபர் என கூறித் திரியும் ஒரு நபரும் அவருடன் சேர்ந்த சிலரும் முயல்வதாகவும், நான் அவர்களின் மடத்து சொத்து அபகரிப்புக்கு துணை போகாததால் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தன் மீது அவதூறு செய்திகளை பரப்பி தன் மீது தங்களது அதிகார செல்வ பண பலத்தை வைத்து பொய் வழக்கு கொடுத்துள்ளதாகவும், 

தனக்கு தமிழ் சரியாக எழுத படிக்க தெரியாதததை பயன்படுத்தியும் எனக்கு இங்கு யாரையும் தெரியாத காரணத்தினாலும் என்னை மிரட்டி என்னிடம் வெறும் வெற்று பேப்பர்களில் தனது கையெழுத்தை வாங்கி மிரட்டுவதாகவும், போலியாக இந்த மடத்தின் சிஷ்யர்கள் சங்கம் என இவர்களாகவே லட்டர் பேடில் உருவாக்கி என்னை நீக்கி விட்டதாக போலி வதந்திகளை மக்களிடையேயும் இங்கு வரும் பக்தர்களிடையேயும் பரப்பி வருகின்றனர். நான் மடத்தின் பணத்தை கையாடல் செய்ததாக இவர்களாகவே போலியாக வதந்தி பரப்பி வருகின்றனர் எனவும், 

இவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றி தனது உயிருக்கும் பல ஹாரி மடத்தின் சொத்துக்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டியும் மக்களுக்கும், பக்தர்களுக்கும், ராமானுஜ தாஸ அடியார்களுக்கும், தமிழக அரசுக்கும், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கும் வீடியோ வெளியிட்டுள்ளார். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *