நெல்லையில் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில் திருச்சியில் தனியார் பள்ளியின் அருகே உள்ள கட்டிடம் மிகவும் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தெற்கு திரௌபதி அம்மன் கோவில் தெரு அக்கரகாரம் புத்தூர் திருச்சி பிஷப் பள்ளி அருகே உள்ள தெருவில் கட்டிடம் ஒன்று இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியே நடந்து செல்லும் பள்ளி மாணவருக்கு அல்லது குழந்தைகளுக்கோ உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனை கண்டுகொள்ளாத வீட்டின் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்றோம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். திருநெல்வேலி போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடப்பதற்கு முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா??
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments