திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகிலுள்ள மேய்க்கல்நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள ஒரு கிணற்றில் உள்ள தண்ணீரில் சிசு (பச்சிளம் குழந்தை) மிதந்து கொண்டிருப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து காட்டுப்புத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு சென்று கிணற்றில் மிதந்து கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் போலீஸார் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்து பிறந்த பெண் குழந்தையை தொப்புள் கொடியுடன் கிணற்றில் வீசி சென்ற மர்ம நபர்கள் யார் என காட்டுப்புத்தூர் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments