திருச்சி காவிரி ஆற்றில் அவ்வப்போது முதலைகள் வருவது வழக்கம். தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் அவற்றைப் பிடித்துக் கொண்டு செல்வார்கள். இந்நிலையில் இன்று காலை திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள காந்தி படித்துறையில் விவசாயிகள் 15க்கும் மேற்பட்டோர் காவிரி ஆற்றில் நடுவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களை மீட்பதற்காக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது தீயணைப்பு துறையினர் காவிரி ஆற்றில் இறங்கி செல்ல முற்பட்டபோது அங்கு ஒன்றை அடி நீளம் உள்ள குட்டி முதலை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அதை பிடிக்க முயற்சி செய்தபோது அது இறந்த நிலையில் இருந்ததை கண்டனர்.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து இறந்த நிலையில் இருந்த முதலை குட்டியை எடுத்துச் சென்றனர். பொதுமக்கள் குளிப்பதற்கும், துணிகள் துவைப்பதற்கும், மீன்பிடிவதற்கும் சென்று கொண்டிருப்பதால் அங்கு குட்டி முதலை இருப்பதால், பெரிய முதலை இருப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக கூறி அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
தற்பொழுது கர்நாடகா காவிரி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விட்டது. அதன் காரணத்தால் அப்பகுதியில் இருக்கும் முதலைகள் இப்பகுதிக்கு தண்ணீரில் வேகத்தில் அடித்து வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. பிடிபட்ட இறந்த நிலை இருந்த முதலையை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துச் சென்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments