Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஆதிவாசி மக்களுக்காக 36 வருடங்கள் போராடிய திருச்சியை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் மரணம்

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து புள்ளம்பாடி அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் வசித்தவர் லூர்துசாமி – கிப்பேரிம்மாள். இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகளும், 3 ஆண் பிள்ளைகளும் பிறந்தனர். இதில் ஐந்தாவதாக பிறந்தவர் ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி. இவர் 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி பிறந்தார் 20வது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். 20 வயது வரை இவரது மூத்த சகோதரர் இருதயசாமி வளர்த்து வந்தார். 1957ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி துறவியாராக ஆனார். பின்னர் 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பாதிரியாராக பதவியேற்றார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஏ வரலாறு பட்டம் பெற்றார் பாதிரியார் படிப்பதற்காக 14 வருடம் திண்டுக்கல், மணிலா, பிலிப்பைன்ஸில் சென்றுள்ளார். இதன் பின்னர் 15 வருடம் பெங்களூர் சமூக கல்வி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அதன்பின்பு 36 வருடம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று ஆதிவாசி மக்களுக்காகப் போராடி உள்ளார். ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி தனது பெயரை ஸ்டேன் சுவாமி என சுருக்கிக் கொண்டு ஆதிவாசி மக்களுக்காகவும், அவர்களின் உரிமையை பெற்றுத் தருவதற்காக போராடி உள்ளார். 80க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.

மேலும் சுயமரியாதை எழுதி முடிக்கும் முன்பு அக்டோபர் 8ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இரவில் தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தனர். ஜார்கண்ட் பீகார் போன்ற மாநிலங்களை தனது இரண்டாவது பிறப்பிடமாக கருதி வாழ்ந்து வந்தார் அங்கு நிலவிய சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் ஆதிவாசிகள் தலித் மக்கள் சுரண்டப்படுவதையும், இயற்கை வளங்கள் அரசாங்கங்கள் மூலம் சண்டை போடுவதையும் மக்கள் அவருடைய சொந்த நிலத்திலேயே செய்யப்படுவதையும் ஆய்வு செய்து பல்வேறு கட்டுரைகள் எழுதி உள்ளார். மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகான் வழக்கில் இவரது பெயர் பொய்யாக சேர்க்கப்பட்டது.

அதற்கு முக்கிய காரணம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அன்றைய அரசின் ஆதரவோடு நிலத்தை ஆக்கிரமித்து இயற்கை சுண்டி அவர்களின் கனவுகள் தவிடுபொடியானது தான் காரணம் என்று கருதி தேசிய புலனாய்வு அமைப்பு சூழ்ச்சி செய்து இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளது. மகாராஷ்டிரா காவல்துறை சந்தேகப்படும் நபராக கருதி ஜார்கண்ட் காஞ்சியில், இவர் வாழ்ந்த இடத்தை 28 ஆகஸ்ட் 2018 மற்றும் 12 ஜூன் 2019 ஆகிய தேதிகளில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

அதன்பிறகு இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. ஒரு வருடம் காலத்திலும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் 5 முறை சுமார் 15 மணி நேரம் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் அழைப்பு விடுத்திருந்தனர்.

அவருக்கு அப்போது வயது 83 பார்க்கின்சன் நரம்புத்தளர்ச்சி நோயால் அவதிப்படுவதால் ஜார்க்கண்ட் அரசு 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியில் பயணம் செய்ய கூடாது என்று உத்தரவு போட்டதால் தன்னால் மும்பைக்கு வர இயலாது என்று தெரிவித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தினால் அதற்கு தயார் என்று கூறியுள்ளார். ஆனால் இவற்றையெல்லாம் தேசிய புலனாய்வு அமைப்பு உதாசீனப்படுத்தி கடந்த அக்டோபர் 8ம் தேதி இரவு 07.30 மணி அளவில் அதிரடியாக ஸ்டான் சுவாமி தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

விடுதலை செய்ய வேண்டும் என பலமுறை வழக்கறிஞர் சந்தானம் மனுக்கள் போட்டார். மேலும் 10 மாதமாக சிறையில் போதிய மருத்துவ வசதி எதுவும் செய்து தராமல் இருந்தால் அதன் பின்னர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். ஜார்க்கண்ட் மாநிலம் ஆதிவாசி மக்களுக்காக 36 வருடங்கள் போராடியவர் மனித உரிமை செயல்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மரணம் அவரது உடலை பார்க்க கூட முடியவில்லை என குடும்பத்தினரும் கிராமத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *