கடந்த சில தினங்களுக்கு முன்பாக, இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில், “கொம்பன் ஜெகன் டீம் (Komban_jegan_team)” என்ற முகவரியில் இருந்து, திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், புகைப்படத்தை பகிர்ந்து, அத்துடன் “விரைவில் தலைகள் சிதறும்” என “Komban Brothers” என்ற பதிவை பகிர்ந்து பொதுமக்கள் மத்தியில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், கலவரங்களை தூண்டும் விதத்திலும் இன்ஸ்டா ஸ்டோரி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், மேற்படி இன்ஸ்டா ஸ்டோரி பதிவேற்றம் செய்தது 16 வயது சிறுவன் என தெரியவந்தது. இதன் அடிப்படையில், மேற்படி இளஞ்சிறார் திவ்யேஷ் என்பவர் மீது, வாத்தலை காவல் நிலைய குற்ற எண்- 69/24, சட்டபிரிவு 153(В), 505(2) IPC r/w 66(D) IT Act-21 09.06.2024- வழக்கு பதிவு செய்து செய்யப்பட்டு, மேற்படி நபரை அழைத்து விசாரணை செய்தபோது, மேலும் 17 வயது சிறுவன் மற்றும் விஷால் (18), த.பெ. வீரபத்திரன் தென்காசி மாவட்டம், ஆகிய இருவருக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்தது.
மேற்படி மூவரும் இளஞ்சிறார்கள் என்பதால், சமூக வலைத்தளங்களில் அச்சுறுத்தும் வகையில் பதிவிடாமல், கவனமாக கையாள வேண்டுமென கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டனர். மேலும், இதில் சம்மந்தப்பட்ட 17 வயதுடைய நபரை தேடிவருகின்றனர்.
இதுபோன்று, பொதுமக்கள் மத்தியில் கலவரம், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments