கடந்த மார்ச் 31-ஆம் தேதி வரை கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்ட நகை கடன், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், திருச்சி திருவளர்சோலை கூட்டுறவு வங்கியில் கடந்த ஜனவரி 25 அன்று பட்டா, அடங்கல் உள்ளிட்ட சான்றுடன், சுமார் 8 1/2 பவுன் நகையை ஆறுமுகம் என்ற விவசாயி அடகு வைத்துள்ளார்.
கடந்த ஜனவரி 25ஆம் தேதி வைக்கப்பட்ட நகைக்கு பலமுறை முறையிட்டும் பிறகு மார்ச் 9ம் தேதி 8 ரசீது வழங்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 31-ஆம் தேதி வரை கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இதுவரை நகைகடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும், இதுகுறித்து கேட்டால் தள்ளுபடி செய்யமுடியாது என கூறுவதாகவும், எனவே உரிய நடவடிக்கை எடுத்து தன் நகை கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆறுமுகம் மனு அளித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments