Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ஏமாற்றும் போலியான நிறுவனம் – திருச்சி மாநகர காவல் ஆணையர் தகவல்

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, ஆன்லைன் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், பொது மக்களிடம் இதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் காவல் துணை ஆணையர்கள், சரக உதவி ஆணையர்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணி நியமன ஆணை (offer Letter) வழங்குவதாக தினசரி நாளிதழ்களில் வரும் விளம்பரங்கள், செயலிகள் (APP), வலைதள தொடர்புகள் (Links) மற்றும் சமூகவலைதளம் மூலம் வரும் விளம்பரங்களை நம்பி பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கு அனுப்பாமல் ஏமாற்றுவதாக போலியான கன்சல்டன்சிகள் மீது தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டும், வழக்குகள் பதிவாகி வருகின்றது.

இது சம்மந்ததாக பொதுமக்கள் குறிப்பாக அறிவுரைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

> கிரிப்டோ கரன்சியில் பணம் முதலீடு செய்தால் அதிகம் லாபம் பெறலாம் மற்றும் தினசரி விளம்பரத்தை லைக் (Like) செய்தாலோ அல்லது பகிர்ந்தலோ (Share) சம்பாதிக்கலாம் என வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம்.

பொதுமக்கள் வெளிநாடுகளில் வேலை வாங்கிதரும் கன்சல்டன்சியிடம் (Consultancy) பணம் செலுத்தும் முன்பு கன்சல்டன்சியானது அரசிடம் முறையாக பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை தெரிந்து கொண்ட பின்பு வெளிநாடுகளுக்கு பணிகளுக்கு அல்லது படிக்க செல்ல கன்சல்டன்சியிடம் பணம் செலுத்த வேண்டும்.

> வேலைக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கும் நிறுவனத்தினருடன் எழுத்து மூலமான ஒப்பந்தங்களை (Agreement) ஏற்படுத்தி கொள்ளும்படியும்,வேலைக்கான விசா (Employment Visa) தவிர்த்து, வேறு வகையான விசாக்கள் குறிப்பாக சுற்றுலா விசாவில் (Tourist Visa) வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும், பொதுமக்கள் குறிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள். 

இளைஞர்கள் முகவர்களிடம் காசோலை அல்லது Net Banking மூலம் பணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். எக்காரணம் கொண்டும் பணமாக (ரொக்கமாக) கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு பணம் கொடுக்க நேரும்பட்சத்தில் கொடுத்த பணத்திற்கான ரசீது (Receipt) பெற்றுக்கொண்டு, பணம் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் இதுபோன்று ஆன்லைன் மற்றும் போலி கன்சல்டன்சிகள் (Consultancy) வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக வெளியிடும் போலி விளம்பரங்களை நம்பி, இளைஞர்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும், இதுபோன்று மோசடியில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கும்மாறும் அல்லது Helpline Number : 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற website-ல் புகார் அளிக்குமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. 

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *