மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…… பொதுமக்களின் கோரிக்கையை முன்வைத்து மதுரை இரயில்வே கோட்ட மேலாளருக்கு இன்று (12.11.2024) கோரிக்கைக் கடிதம் எழுதியுள்ளேன்.
அதில், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இராமேஸ்வரம் – பனாரஸ் வாராந்திர விரைவு இரயில் (இரயில் எண் 22535) மற்றும் இராமேஸ்வரம் – அயோத்தி கேன்ட் – இராமேஸ்வரம் வாராந்திர விரைவு இரயில் (இரயில் எண் 22613/14) ஆகிய இரண்டு இரயில்களும்,
புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன் என்றும், இந்தக் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதுடன், இது குறித்து மேலாளரை அலைபேசியிலும் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தேன். அவரும் விரைந்து பரிசீலித்து ஆவணம் செய்வதாக பதிலளித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments