திருச்சி -புதுக்கோட்டையில் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக திருச்சி சுப்ரமணியபுரம் முதல் செம்பட்டு பகுதி வரை குடியிருப்புகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்டது.
Advertisement
புறம்போக்கு இடத்தில் குடியிருந்தவர்களை காலி செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்து மாற்று இடத்தை நாகமங்கலத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கொடுத்துள்ள நிலையில், தங்களுடைய வாழ்வாதாரம் முழுவதும் இங்கு இருப்பதாகவும், இந்த இடத்தில் மாற்று இடம் வழங்காமல் பல கிலோ மீட்டர் தொலைவில் கொடுப்பதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும்,
Advertisement
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் 40க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அப்பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Advertisement
Comments